Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோயினை விட எனக்கு மேக் அப் போட அதிக நேரம் ஆகியிருக்கும் – 2.0 பற்றி அக்ஷய் குமார்.
இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படிப்பு தான் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. வசீகரன் மற்றும் சிட்டி ரோல்களில் மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2.o-trailer-akshay
முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஷ்ங்கர் நடிப்பதாக பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் ஹ்ரித்திக் ரோஷன், நீல் நிதின் முகேஷ் என்று சொல்லப்பட்டு, இறுதியில் அக்ஷ்யிடம் வந்தது.
பாலிவுட்டில் பிஸி மனிதரான இவர் எவ்வாறு கால் – ஷீட் ஒதுக்கி கொடுத்தார் என்பதே ஆச்சர்யம் தான். இந்நிலையில் மனிதர் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டி உள்ளார்.
அதில் “நடிகனாக நான் எப்பொழுதுமே மேக் – அப் அணிய மாட்டேன். இந்தப்படம் முற்றிலும் மாறுபட்ட சமாச்சாரம். இந்த லுக்கிற்கு தயாராக நான் ஹீரோயினை விட அதிக நேரம் எடுத்திக்கொண்டிருப்பேன் .” என அழுகும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.
For an actor who never puts makeup, 2.0 was a different story altogether. To get this look right, I think I must’ve taken longer than the female lead ?? #2Point0 pic.twitter.com/Pqn7F8yJS3
— Akshay Kumar (@akshaykumar) November 4, 2018
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
படம் ரிலீசாகட்டும் பொடுசெல்லாம், உங்களை பார்த்தல் செல் போனை எடுத்து பதுக்கத்தான் போகிறார்கள் அக்ஷய் ஜி. வி ஆர் வைட்டிங்.
