அஜித்தின் வீரம் ரீமேக். வைரலாகுது அக்ஷய் குமாரின் “பச்சன் பாண்டே” கெட்- அப், பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

பாலிவுட் சினிமாவில் நம் தென்னகத்து படங்களின் ரி மேக்குக்கு என நல்ல மார்க்கெட் உள்ளது. சமீபத்தில் கூட தெலுங்கு அர்ஜுன் ரெட்டி ஹிந்தியில் கபீர் சிங் என வெளியாகி ஹிட் அடித்து, வசூல் வேட்டை செய்தது.

அக்ஷய் குமார் பொறுத்தவரை பல ஜானர்களில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். எனினும் சிறுத்தை, சந்திரமுகி, துப்பாக்கி, காஞ்சனா என ரிமேக் வகையறாவில் பெரிய லிஸ்ட் சொல்லலாம். அந்தவகையில் தான் இப்படமும்.

முதலில் சல்மான் கான், பின்னர் விக்கி கௌஷல் என பேசப்பட்டு இறுதியில் அக்ஷய் குமார் வசம் வந்துள்ளது இப்படம். சாஜித் நாடியாத்வாளா தயாரிப்பில் பார்ஹட் சம்ஜி இயக்கத்தில் உருவாகிறது இந்த “பச்சன் பாண்டே”. அச்சு அசல் ரிமேக் என்பதை விட இது தழுவல் என்றும் சொல்லும் லாவுக்கு பாலிவுட்டிற்கு ஏற்ற மாதிரி மாறுதல்கள் செய்துள்ளாராம் படக்குழு. இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.

bachan pandey akshay kumar

ஹீரோயின் மற்ற தகவல்கள் எதுவும் முடிவாகவில்லை. இப்படம் அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியாகுமாம். தற்பொழுது முதல் லுக் போட்டோ ஷூட் மட்டும் முடிந்துள்ளது.

Leave a Comment