ரூ 500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார்! யாரிடம் ஏன் தெரியுமா?

அக்‌ஷய் குமார் இந்தியா முழுவதும் ரீச் உள்ள நடிகர். ஒரு புறம் கமெர்ஷியல் சினிமா மறுபுறம் மெஸேஜ் சொல்லும் படம் என வித விதமாக நடித்து அசத்துபவர். பாலிவுட்டில் அனைவருக்கும் இவரை பிடிக்கும், அந்தளவுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் நபர்.

தன் மீது அவதூறு பரப்பிய பீகாரை சேர்ந்த யூ டியூப் சேனல் மீதி ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பியது லேட்டஸ்ட் சமாச்சாரம்.

ரஷித் சித்திக் என்பவர் எப்.எப். நியூஸ் என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களைத் தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி நாடு விட்டு தப்பிக்க பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் உதவியதாகவும், சுஷாந்தின் மரணம் குறித்து முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரி ஆதித்ய தாக்கரே ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எம்.எஸ்.தோனி படத்தில் நடிக்க சுஷாந்த் சிங் தேர்வானதில் அக்‌ஷய் குமாருக்கு ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என்றும் ரஷித் சித்திக் தனது சேனலில் கூறினார்.

எனவே தான் அக்ஷய் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம், மன அழுத்தம் போன்றவற்றால் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீசை அனுப்பி உள்ளார்.

ரஷித் சித்திக் தன்னை மட்டும் அக்ஷய் டார்கெட் செய்கிறார். 500 கோடி எல்லாம் தேவையில்லாத ஒன்று. அவர் வேண்டுமென்றே தன்னை துன்புறுத்த முயல்கிறார் என தந்து வக்கீல் வாயிலாக பதில் தந்துள்ளார்.

இதற்கு முன்பே மும்பை போலீசாருக்கு மற்றும் மகாராஷ்டிர மந்திரி ஆதித்ய தாக்கரே எதிராக அவதூறு பரப்பியதாக ரஷித் சித்திக் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.