Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ப்ரோக்ராம் ப்ரோமோஷனுக்காக உடம்பில் நெருப்பை பற்ற வைத்த அக்ஷய் குமார். டென்ஷன் ஆகி அவர் மனைவி பதிவிட்ட பதில்.

டிஜிட்டல் தளத்தில் தான் நுழைவதை ( ‘தி எண்ட்’) அறிவித்தார் அக்ஷய் குமார்.

அக்ஷய் குமார் – பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோ அக்ஷய் குமார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.O’ படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் பல ஜானர்களில் படம் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். கமேற்சியால் படம், ஜனரஞ்சக படம், சமூக நோக்குடன் உள்ள சினிமா என்று அனைத்திலும் துளியும் தயக்கம் இன்றி நடிப்பவர்.

பாலிவுட்டில் கேசரி, ஹவுஸ் புல் 4, குட் நியூஸ், மிஷன் மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மனிதர் அமேசான் ப்ரைம் வீடியோஸ் தயாரிப்பில் இவர் நடிக்கும் (THE END) சீரீஸின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது.

டிஜிட்டல் தளத்தில் தனது எண்டரியை ( ‘தி எண்ட்’) அறிவித்தார். இந்த நிகழ்வில் தன் உடல் முழுக்க நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு மேடையில் வலம் வந்தார்.

அந்த போட்டோஸுடன் ஸ்டேட்டஸும் பதிவிட்டார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த அக்‌ஷயின் மனைவி ட்விங்கிள் கண்ணா ‘ இப்படி தீயில இருக்கறத நான் பாக்கணுமா. இதுல பிழைச்சு, வீட்டுக்கு வா உன்னை கொன்னுடறேன்’ என ட்வீட் பதிவிட்டிருந்தார்.

இது தான் தனுக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகிறது என கணவருக்கே உரிய குசும்பில் பதில் தட்டினார் அக்ஷய் குமார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top