fbpx
Connect with us

அக்ஷய் குமாரின் இந்த செயலால், மனம் நெகிழ்ந்து நன்றி சொன்ன பத்மாவத் படக்குழு.

News / செய்திகள்

அக்ஷய் குமாரின் இந்த செயலால், மனம் நெகிழ்ந்து நன்றி சொன்ன பத்மாவத் படக்குழு.

பத்மாவதி திரைப்படம்   பல போராட்டங்களுக்கு பிறகு பத்மாவத் ஆன கதை ஊர் அறிந்த சங்கதி தான். இப்படம் வரும் ஜனவரி 25 ரிலீசாகிறது. அதே தினத்தன்று தான் அக்ஷய் குமார் நடிப்பில் பேட் மேன் என்ற படமும் ரிலீஸாவதாக இருந்தது.

Padmaavat

எனினும் அக்ஷய் குமாரை நேரில் சந்தித்துள்ளார்  இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. அப்பொழுது தன் சூழ்நிலையை விளக்கி   ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்தால் பிசினஸ் நஷ்டம் ஏற்படும் என்று கூறி அக்ஷியின்  படத்தை  பின்னர் ரிலீஸ் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அக்ஷய் குமாரும் தன் படத்தின் ரிலீஸை  பெப்ரவரி 9 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளார்.

padman

இவரின் இந்த செயலை பலரும் ஆமோதித்து, பாராட்டி வருகின்றனர். படத்தின் நடிகர்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், இயக்குனர் அக்ஷய் குமாருக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர் ..

twitter

padmavat

 

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: சூப்பர் சார் நீங்க !

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top