பாக்ஹி 2

baaghi 2

டைகர் ஷெராப் – திஷா பத்தினி நடிப்பில் வெளியாகியுள்ள படம். நம் தமிழில் சிபிராஜ் நடித்த சத்யா ( தெலுங்கில் க்ஷணம் ) படத்தின் ரிமேக். அஹமட் கான் படத்தை இயக்கியுள்ளார். மையக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் படக்குழு. இந்த படம் மிக சிறந்த பாக்ஸ் ஆஃபீஸ் ஒபெநிங் தந்துள்ளது.

#tigershroff #Baaghi2

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

டைகர் ஷெராப் மூத்த நடிகர் ஜாக்கி ஷெராஃபீன் மகன். மிஸ்டர். பிட் என்று தான் சொல்லவேண்டும். இவர் கராத்தேவில் ஐந்தாம் லெவல் ப்ளாக் பெல்ட் வைத்துள்ளார். தூம் 3 படத்தில் அமீர் கான் அவர்களுக்கு உடம்பு எதுவதற்கு கூட இருந்தவரும் இவரே. டான்ஸ், மார்ஷியல் ஆர்ட்ஸில் கை தேர்ந்தவர்.

இந்த பாக்ஹி 2 படத்தின் விளைவாக தான் அக்ஷய் எப்படி ஒரு கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“தலை வணங்குகிறோம் டைகர் ஷெராப் . பாலிவுட் பெருமையாக அறிவிக்கலாம் எங்களிடமும் ஒரு டோனி ஜா உள்ளார் என்று. உன் ஆக்ஷன் காட்சிகள் பட்டயகிழப்பது படத்தில்” என்று டீவீட்டினார்.

Tiger Sherof – Tony Jaa

உடனே தன்னடக்கத்துடன் நம் ஹீரோவும் பதில் ட்வீட் செய்தார்.

“நன்றிகள் சார். நீங்கள் இது போன்று சொல்வதை நான் உலகிலேயே மிக பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ரொம்ப நாட்களுக்கு முன்பே நம் சினிமாவில் இதையெல்லாம் நீங்கள் செய்து விட்டீர்கள். உங்களை பின் பற்றியே நாங்கள் நடக்கிறோம். நீங்கள் தான் ஒரிஜினல் ஆக்ஷன் மேன். உங்களுக்கு மாற்றே கிடையாது.” என்று தன்னடக்கத்துடன் டீவீட்டியுள்ளார்.