சரித்திர புகழ் வாய்ந்த சாம்ராட் ரோலில் அக்ஷய் குமார் – வெளியானது டைட்டில் லுக்

அக்ஷய் குமார் கமெர்ஷியல் சினிமா ஒருபுறம் நல்ல கருத்துடைய படங்கள் மறுபுறம், என இரண்டிலும் அசத்துபவர். தனது நடிப்பு திறனால் பாலிவுட் சினிமா என்ற எல்லையை தாண்டி இந்தியா அளவில் ரீச் ஆனவர். இவர் நேற்று முன்தினம் தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்பொழுது தான் தனது முதல் சரித்திர படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரித்விராஜ் – இப்படத்தில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாம்ராட் பிரித்விராஜ் சவுகான் ரோலில் இவர் நடிக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.  சந்திரபரகாஷ் திவேதி இப்படத்தை இயக்குகிறார். படம் அடுத்தாண்டு தீபாவளி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இதோ ..

Leave a Comment