Connect with us
Cinemapettai

Cinemapettai

எனக்கு டாஸ்க் கொடுக்க இவன் யாரு.. கோபத்தில் பொருளை போட்டு உடைத்த அக்ஷரா

akshara

Videos | வீடியோக்கள்

எனக்கு டாஸ்க் கொடுக்க இவன் யாரு.. கோபத்தில் பொருளை போட்டு உடைத்த அக்ஷரா

பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக இருக்கும் சிபி, வீட்டிலுள்ள ஹவுஸ்மேட்ஸிடம் சற்று கண்டிப்பாக நடந்து கொள்கிறார். நேற்றைய எபிசோடில் கூட சிபியின் வார்த்தைக்கு பிரியங்கா எதிர்ப்பு தெரிவித்தார்.

அது போல் இன்று அக்ஷரா சிபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைக்கும் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் அக்ஷரா தன்னுடைய ஆடையை ஸ்டீம் செய்வதற்காக செல்கிறார்.

அதற்கு சிபி, அக்ஷரா விடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் அனைவரும் வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே அக்ஷரா எனக்கு டைம் கொடுத்தால் தான் செய்ய முடியும் மண்டை மேல் உட்கார்ந்து கொண்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று ஆக்ரோஷமாக பேசுகிறார்.

இதனால் கோபமடையும் சிபி உங்கள் வேலையை பார்க்க அனுமதி இல்லை என்று அக்ஷராவை திட்டுகிறார். அப்போ நான் எதுவுமே பண்ண மாட்டேன் நீ என்ன வேணா பண்ணிக்கோ என்று அக்ஷரா வெளியேறுகிறார்.

கோபமாக வெளியேறும் அக்ஷரா பாத்ரூம் ஏரியாவில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளி உடைக்கிறார் அவரின் இந்த கோபத்தை கண்டு சக போட்டியாளர்கள் அதிர்ந்து நிற்பதுடன் புரோமோ முடிகிறது.

சமீப காலமாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் சற்று மன அழுத்தம் உருவாகி உள்ளது போல் தெரிகிறது. அதனால்தான் பெண்கள், ஆண்களிடம் அதிக சண்டையில் ஈடுபடுகின்றனர். இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது சிபி தன்னுடைய வேலையில் சரியாக இருப்பது போல் தான் தெரிகிறது.

பிக் பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்ததற்காக இந்த வாரம் அக்ஷரா என்ன தண்டனை அனுபவிப்பார் என்று விரைவில் தெரிந்துவிடும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top