Aksharahaasan-Kamalhaasan

எப்பா, இப்பதானே இந்த பொண்ணு சாதாரணமா இருக்கு. தன் அப்பா ஒரு பெரிய ஸ்டார்க்கிற கர்வம் இல்லை. ப்ரோமோஷனுக்கு ஜுரமா இருந்தா கூட ஓடி வருது. மீடியா மீட் முடிச்சு ஆட்டோவில் கிளம்புதுன்னு பேசினீங்க. ஒரு வாரம் கூட போகலை. இப்போ பாலிவுட் அக்சராவை திமிர் பிடிச்ச பொண்ணுன்னு கடுமையா தாக்க ஆரம்பிச்சு இருக்கு.

‘ லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா’ படம் விவான் ஷா,அக்ஷரா ஹாசன் நடிப்பில் வரும் ஏப்ரல் 7 ம் தேதி ரிலீஸ் ஆக போகிறது. இந்த பட ப்ரோமோஷனுக்காக சீனியர் வினியோகஸ்தரான சன்னி கன்னா மீடியா மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

Laali Ki Shaadi Mein Laaddoo Deewanaஅந்த மீட்டில் தான் அக்ஷரா ஹாஸன் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். அதை பற்றித்தான் இப்போ பாலிவுட் முழுக்க பேச்சு.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு போய்க்கொண்டே இருந்திருக்கிறது. அதனால் கடுப்பான அக்சரா நெளியத்தொடங்கியுள்ளார். அப்புறம் சன்னி கன்னாவை அழைத்து 6 மணியுடன் எல்லாத்தையும் முடிங்க என்று சொல்லியுள்ளார்.

ஆனாலும், 6 மணிக்கும் ஒரு பத்திரிகையாளர் பேட்டிக்காக வெய்ட் பண்ண, கன்னாவை கூப்பிட்டு செம டோஸ் விட ஆரம்பித்து இருக்கிறார் அக்ஷரா. இதைக்கண்டு அந்த பத்திரிகையாளர் குறுக்கே புகுந்து சமரசம் செய்ய வர, அவரையும் பிடிச்சு கடுப்பாக திட்ட, அப்புறமாய் கொஞ்சம் நிதானத்துக்கு வந்து கூல் ஆகியுள்ளார்.

அப்புறமாய் பெட்டியை கொடுத்துட்டு போனாலும், அம்மணி இப்படி சீனியர் வினியோகஸ்தர், பத்திரிகையாளரை திட்டியதுதான் இப்போ பாலிவுட்டில் ஹாட் டாபிக்.