Connect with us
Cinemapettai

Cinemapettai

akshara haasan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பாவை மிஞ்சிய மகள்.. பலான விஷயத்தை அப்பட்டமாக பேசிய அக்ஷர ஹாசன்

உலகநாயகன் கமலஹாசன் பல திரைப்படங்களில் நடித்து இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டவர். இவரோட இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அதுலயும் முக்கியமா ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் பாடி அழகாகவும் நடிப்பாங்க.

ஸ்ருதிஹாசனும் அவர்களுடைய தங்கை அக்ஷரா ஹாசனும் சோசியல் மீடியாவுல ரொம்பவே ஆக்டிவா இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து போடுற வீடியோ இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி வரும். அந்த வீடியோக்களில் இரண்டு பேரின் உறவை பார்க்கும் போது அழகாக இருக்கும்.

அக்ஷரா ஹாசன் தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி அந்த படத்தில் நடித்து நல்ல பெயரை வாங்கினார். தற்போது இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் புரமோஷனுக்காக அக்ஷரா ஹாசன் ஒரு இன்டர்வியூவில் பேசியுள்ளார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு பெண் கடைக்கு போய் கான்டம் வாங்குவது என்ன தப்பு என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் உடலுறவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று எனவும் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறு இல்லை எனவும் கூறியுள்ளார்.

அப்பா மாதிரியே பொண்ணும் ரொம்பவே ஓப்பனாக பேசுவதைக் கண்டு நெட்டிசன்கள் இணையத்தில் கமெண்ட்டுகளை அள்ளி குவிச்சிட்டு வருகிறார்கள். அக்ஷர ஹாசன் வெளிப்படையாக பேசுவதை பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒரு பெண் தைரியமாக பேசுவது ஒருபக்கம் பாராட்டி வந்தாலும் உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என கூறுவது ஒரு மோசமான விஷயம் என மற்றொரு பக்கம் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு ஆணாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி தனக்கு பிடித்தவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள நினைப்பது மிகவும் தவறான விஷயம் எனவும் அப்படி அனைவரும் நினைத்தால் இந்த உலகில் யாரும் நிம்மதியாக வாழ முடியாது எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top