பெங்களூர்: நடிகை அக்ஷரா கவுடா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிக்கிறாராம்.

அஜீத்தின் ஆரம்பம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை அக்ஷரா கவுடா. போகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். படத்தில் அரவிந்த் சாமி அக்ஷராவை மச்சான், மச்சான் என்று அழைப்பார்.

 

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அக்ஷரா முறையாக சிகிச்சை எடுத்து அதில் இருந்து வெளியே வந்துள்ளார். மன அழுத்தம் குறித்து வெளியே சொல்ல தான் வெட்கப்படவில்லை என்றார்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ள அக்ஷரா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்று பேச்சாகக் கிடக்கிறது. அக்ஷரா தனது காதலருடன் சேர்ந்து அமெரிக்கா மற்றும் மாலத்தீவுகளுக்கு சென்று வந்துள்ளார்.

தனது நலம் விரும்பியான இயக்குனர் சேகர் கபூரை அண்மையில் சந்தித்த அக்ஷரா தனது காதலரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். விரைவில் உலகிற்கும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.