Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
புதிய காதலியுடன் சேர்ந்து பழைய காதலியை வெறுப்பேத்தும் நடிகர்.. லவ்வு புட்டுக்க சாபம் விட்ட நடிகை
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நாயகியாக நடித்து வருபவர் தான் அந்த நடிகை. வயது 35 தாண்டிய நிலையில் இன்னும் திருமணம் ஆகாமல் ஊரை ஏமாற்றி வருகிறார். திருமணம் மட்டும் தான் ஆகவில்லை என ஒரு குரூப் கிண்டல் அடிக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அந்த நாயகி திடீரென அந்த திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் நிறுத்தி விட்டார். அதற்கு காரணம் தன்னுடைய பழைய காதலர் திரும்பி வந்து விட்டதால் என்றனர்.
மீண்டும் அந்த அக்கடதேச நடிகருடன் இஷ்டத்திற்கு பார்க், பீச், ஹோட்டல் என சுற்றித் திரிந்தார் அந்த நடிகை. அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருடன் வேண்டுமென்றே ஒரு விளம்பரப் படத்திலும் நடித்தார்.
அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் காதல் பிச்சுகிட்டு அடித்தது எனவும் அவரது வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் மீண்டும் ஒரு நட்சத்திர ஜோடி உருவாக இருந்த நிலையில் அந்த ஹீரோ வேறு ஒரு பெண்ணை காதலித்ததால் இந்த நடிகையை கழட்டி விட்டு விட்டாராம்.
அக்கட தேச நடிகர் பெரிய பிசினஸ்மேன் மகள் ஒருவர் மீது சமீபத்தில் காதல் ஏற்பட்டு விட்டதாம். அதுமட்டுமில்லாமல் அந்த பெண் ஏற்கனவே அந்த நடிகரின் குடும்பத்தாரால் பார்க்கப்பட்டவர் தானம்.
இந்நிலையில் அந்த தமிழ் நடிகை கழற்றிவிட்டு புதிய காதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டார் அந்த நடிகர். பத்தாததுக்கு திருமண தேதிகள் கூட முடிவு செய்துவிட்டார்களாம்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் என்னுடைய வாழ்க்கைக்காக பிறந்தவர் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது இவர்தான் என தனது புதிய காதலியை அடையாளப்படுத்தினாராம் அந்த ஹீரோ. அவ்வளவுதான் நடிகைக்கு பயங்கர ஆத்திரம்.
என்கூட சுற்றும்போதும் இதைத்தான சொன்ன என செம காண்டில் இருக்கிறாராம். எப்படியாவது அந்த திருமணம் பாதியில் நின்றுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம் அந்த நாயகி.
அந்த நடிகர் இந்த நடிகையிடம் வெளியில் சுற்றலாம், என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என தெளிவாக சொல்லி விட்டாராம்.
