AK61 வல்லமை பட கதை இதுதானாம்.. எச் வினோத் சொன்ன ட்விஸ்ட்டில் அசந்துபோன அஜித்

எச் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை போன்ற வித்தியாசமான கதைகளை எடுப்பதில் வல்லவர். அவர் சமீபத்தில் அஜித்தை வைத்து எடுத்த படம் வலிமை. அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், எங்கேயோ லேசாக சறுக்கல் அடைந்தது.

அது போகட்டும், அடுத்த படமும் போனி கபூர் மற்றும் அஜித் கூட்டணியில் தான் எச் வினோத் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே வலிமை படத்தில் வினோத்தின் விருப்பமில்லாமல் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

வலிமை படம் வினோத்தின் ஒரிஜினல் கதையே கிடையாது. படத்தில் அஜித்திற்காகவும், ரசிகர்களுக்காகவும் நிறைய மாற்றங்கள் செய்து படத்தை கெடுத்து விட்டனர் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இப்பொழுது அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ஏகே 61 படத்தில் அஜித் ஹீரோவாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த கதைதான் அஜித்திற்கு ஏற்கனவே வினோத் சொல்லிய கதை, அதைத்தான் வலிமையாக மாற்றிவிட்டனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏகே 61 (வல்லமை) படத்தில், எப்பேர்பட்ட திருடனாக இருந்தாலும், புத்திசாலித்தனமாக திருடினாலும் எப்படியும் மாட்டி விடுவான். திருடர்கள் தங்களுக்கு தெரியாமல் ஏதாவது ஒரு அடையாளத்தை அங்கேயே விட்டு சென்று மாட்டிக் கொள்வார்கள்.

இந்தப்படத்தில் அதையும் தாண்டி எப்படி புத்திசாலித்தனமாக திருடுவது. போலீசாரிடம் இருந்து எப்படி தப்பிப்பது போன்ற குற்ற செயல்களின் பின்னணி தான் இந்த கதையும்.

இந்த கதாபாத்திரத்தில், அஜித்திற்காகவே சில டெக்னிக்கல் விஷயங்களை கண்டுபிடித்து உள்ளார்களாம். இந்தப் படம் ரொம்ப நாட்கள் இழுக்காமல் சீக்கிரம் ரெடி ஆகி விடுமாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்