ஏகே61 தீர்க்க போகும் முக்கிய பிரச்சினை.. வங்கி பிரச்சனைக்கு சாட்டையடி கொடுக்கும் அஜித்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக அங்கு பிரம்மாண்டமான ஒரு செட் போடப்பட்டு சூட்டிங் நடந்து வருகிறது.

இது முழுக்க முழுக்க பேங்க் ராபரி பற்றிய கதையாக உருவாகி கொண்டிருக்கிறது. இதற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் இருப்பது போன்ற ஒரு செட்டை ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக போட்டு இயக்குனர் படமாக்கி கொண்டிருக்கிறார்.

கதைப்படி மவுண்ட் ரோட்டில் அந்த பாங்க் இருப்பது போன்று கட்டப்பட உள்ளது. அதனால்தான் மவுண்ட் ரோட்டை அப்படியே ஒரு செட்டாக போட்டு படமாக்கி கொண்டிருக்கின்றனர். படத்தில் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை அதிக அளவில் கவரும் என்று கூறப்படுகிறது.

இதில் பாங்கில் நடக்கும் திருட்டு சம்பவத்தை மட்டும் அல்லாமல் வேறு ஒரு முக்கிய பிரச்சினையை பற்றியும் சொல்ல இருக்கிறது. அதாவது சமீப காலமாக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று பேங்க் லோன் சம்பந்தப்பட்டது தான். சில பேங்க் காரர்கள் கஸ்டமர்கள் இடம் ஆசை வார்த்தையை தூண்டி எப்படியாவது லோன் எடுக்க வைத்து விடுவார்கள்.

சிலருக்கு லோன் எடுக்கும் யோசனை இல்லாவிட்டாலும் இவர்களின் பேச்சில் மயங்கி லோன் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதன் பிறகு அந்த லோனை சரிவர கட்ட முடியாத சமயத்தில் அவர்கள் மக்களை படு கேவலமாக நடத்துவார்கள்.

இதுபோன்ற பிரச்சினையில் சிக்கி பல மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் வாங்கிய தொகைக்கு மேல் பணத்தை கட்டி அல்லல்படுபவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி தான் இந்த படத்தில் காட்ட இருக்கிறார்களாம். இதன் மூலம் வங்கிகளில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அஜித் சாட்டையடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்