வேம்புலி-யை அடுத்து அஜித்தை மிரட்ட போகும் வில்லன்.. வெறித்தனமாக தயாராகும் AK61

தல அஜித் 3வது முறையாக எச்.வினோத் உடன் இணைந்து தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடைசியாக தல அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை படத்தை இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்தது போல் இந்தப் படத்தையும் இழுத்தடிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடியுங்கள் என்று அஜித் இரவும் பகலுமாக உளைச்சல் கொண்டிருக்கிறாராம்.

சில நேரங்களில் 18 மணி நேரம் ஷூட்டிங் நடைபெறுகிறதாம். கொஞ்சம் கூட அலுப்பாகமல் புது உத்வேகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித். ஜான் கொக்கின் ஏற்கனவே மெயின் வில்லனாக நடிக்க உள்ளார், இவருடன் சேர்ந்து அடுத்த ஒரு வில்லன் இணைகிறார் என்பதுதான் தற்போதைய லேட்டஸ்ட் அப்டேட்.

ஏற்கனவே கௌதம் வாசுதேவ மேனன் படத்தில் நடித்தவர் இப்பொழுது அஜித்திற்கும் வில்லனாகிறார். நடுநிசி நாய்கள் என்ற படத்தில் வில்லனாக வீரா என்ற நடிகர் மிரட்டி இருப்பார். இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் அசிஸ்டன்ட் டைரக்டராக பல படங்களில் வேலை செய்துள்ளார்.

வலிமை படத்தில் அஜித் கார்த்திகேயாவிற்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்ததை போல வீராவிற்கும் இந்த படத்தில் நிறைய கற்றுக் கொடுத்து அவரை வளர்த்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வளர வேண்டும் என சினிமாவில் நுழையும் நடிகர்களை அஜித்துக்கு நிகராகவே நடிக்க வைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சி ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது. அத்துடன் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் வீரா மிரள விடுவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

Next Story

- Advertisement -