Connect with us
boomerang-movie

தல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

News | செய்திகள்

தல 59 பட பூஜையின் பொழுதே, தல 60 எப்போ தொடக்கம் மற்றும் ரிலீஸ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

பிங்க்

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும் டிராமா வகை ஜானர்.


பேவியூ புராஜக்ட் எல்எல்பி தயாரிப்பது போனி கபூர். இயக்குனர் வினோத் என்பது மட்டுமே கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று படத்தின் பூஜை நடைபெற்றது. பின்னர் யுவன் இசை. ஒளிப்பதிவு நீரவ் ஷா போன்ற விவரங்கள் உறுதியானது. அதுமட்டுமன்றி கரண் தான் வில்லன் எனவும், அவரின் சார்பில் ஆஜர் ஆகும் வக்கீல் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே என்ற தகவலையும் சொல்லப்படுகிறது, எனினும் எது உண்மை என்று தெரியவில்லை.

Thala 59

மேலும் இங்கலீஷ் விங்கிலீஷ் பட சமயத்தில் அஜித் ஸ்ரீதேவியிடம் அவர் பாணரில் படம் பண்ணுவதாக சொல்லியுள்ளார். எனினும் கதை எதுவும் சரியாக அமையவில்லை. தற்பொழுது அதனை தான் அவர் நிறைவேற்றியுள்ளார்.

மேலும் பிங்க் படத்தை ரிமேக் செய்யலாம் என அஜித் தான் சொன்னதாகவும் தெரிகிறது. எதார்த்தமான அவரின் படங்கள் பிடித்து போக இயக்குனராக வினோத்தை போனி கபூர் முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

அஜித் 20 நாட்கள் மட்டுமே கால் ஷீட் கொடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

போனி கபூர் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது. மேலும் இந்த சமயத்திலேயே அவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் பற்றியும் அவர் தெரிவித்துவிட்டார்.

இன்று படப்பிடிப்பை துவக்கி, 2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி
பிங்க் பட ரிமேக்கை ரிலீஸ் செய்கிறார்கள் . அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தை, 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகிறது.

ஆகமொத்தத்தில் இந்த 2019 இல் இரண்டு அஜித் படங்கள் ரிலீஸாவது உறுதி.

அப்படி பார்க்கையில் அடுத்தடுத்து இரண்டு அஜித் படங்கள் என்பது உறுதியாகிவிட்டது. அநேகமாக AK60 விஷ்ணுவர்தனின் சரித்திர படமாக இருக்குமோ என்ற ஆசை தல ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top