ajith

‘விவேகம்’ படத்துக்குப் பிறகு, அஜித் – சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ajith

சத்யஜோதி பிலிம்ஸ் டி.தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ‘விசுவாசம்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

‘ஜனவரி மாதம் ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு, 2018 தீபாவளியன்று திரைப்படம் வெளியாகும்’ என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் பிற நடிகர் – நடிகைகளின் விவரமும் டெக்னிக்கல் டீமின் விவரமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ajith

அஜித்தின் இந்த படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’ என வெளியான ஒருசில மணி நேரத்தில் டுவிட்டரில் டிரெண்டிங், மதுரையில் போஸ்டர், பேனர், என அஜித் ரசிகர்கள் கலக்கி கொண்டிருந்தனர்

இந்த ஒரு படத்தின் டைட்டில் டூவிலரில், காரில் வரைய ஒருசில நாட்களாவது ஆகும். ஆனால் அஜித்தின் வெறித்தனமான ரசிகை ஒருவர் தனது டூவீலரில் ‘விசுவாசம்’ டைட்டில் வெளியான ஒருசில மணி நேரங்களில் அந்த படத்தின் டைட்டிலை வரைந்துள்ளார்.

ajith fans

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துள்ளார். இந்த ஸ்டேட்டஸும் வழக்கம் போல் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.