நயன்தாரா பட வில்லனை 2-வது முறையாக கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த மிஸ்கின்.. எதிர்பார்ப்பை கிளப்பிய பிசாசு-2 அப்டேட்

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட படங்கள் மூலம் தனித்துவமான இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவரது படங்கள் எப்போதுமே வித்தியாசமான கோணத்தில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு நிலவி வரும்.

அந்த வகையில் இவரது அறிமுகப் படமான சித்திரம் பேசுதடி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன் போன்ற படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் மாறுபட்ட கதைக் களங்களையும் கொண்டிருந்தன.

சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் அடுத்ததாக இயக்கும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் இவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்தார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர் அஜ்மல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ajmal-cinemapettai
ajmal-cinemapettai

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் சைக்கோ வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் அஜ்மல். அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிஷ்கினின் பிசாசு2 படத்தில் அவர் இணைந்துள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அஜ்மல் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்