தமிழில் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விவேகம் திரைப்படம் பாலிவுட்டிலும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழில் மட்டுமின்றி, இந்தியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. விவேகம் படத்தின் இந்திப் பதிப்பிற்கான உரிமை 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவேகம் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளதால், இந்தியிலும் இப்படம் மாஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் பில்லா, மங்காத்தா, என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.