Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை படத்தின் மூலம் கோலிவுட்டை மிரள விடப் போகும் அஜீத்.. ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி!
கோலிவுட்டில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பினால் முன்னேறி, இமாலய வெற்றியைப் பெற்றிருக்கும் நடிகர் தான் தல அஜித்.
மேலும் தல நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும், தற்போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது தல நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ படத்திற்காக அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்த நிலையில் ‘வலிமை’ படத்திற்காக அஜீத் செய்த ஒரு விஷயம், இணையத்தில் வெளியாகி, இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது. அதாவது, தல அஜித் ஒவ்வொரு படத்திற்கும் முனைப்புடன் செயல்பட்டு, தன்னுடைய முழு வித்தையையும் இறக்குவது வழக்கம். மேலும் அஜித் ‘வலிமை’ படத்தில் ஒரு சீனியர் போலீஸ் ஆபீஸராக, ஈஸ்வரமூர்த்தி என்ற ரோலில் நடிக்கவுள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அந்த வேடத்திலும் ரசிகர்களை பிரமிப்பூட்டும் வகையில், சென்னையின் உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்து, அவரிடம் சண்டை காட்சிகளுக்கான ஆலோசனைகளை பெற்று வருகிறாராம் அஜித்.
அதுமட்டுமில்லாமல் அஜித் போலீஸ்காரரிடம், ‘எப்படி காயமில்லாமல் ஒருவரை பயங்கரமாக தாக்குவது’ என்ற வித்தையையும் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.
ஏனென்றால், அஜித் இந்த படத்தில் சாதாரண சண்டை காட்சிகளுக்கு பதிலாக போலீஸின் வர்ம அடி சண்டைக்காட்சிகளை வைக்க நினைத்தாராம். இதனால் வலிமை படத்தில் அஜித்தை ஒரு நிஜ போலீஸாகவே காணமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

valimai-ajith-cinemapettai
எனவே, தல அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் வித்தியாசமான சண்டைக் காட்சிகளை காண முடியும் என்பதால் தல ரசிகர்கள் எக்கச்சக்க குஷியில் உள்ளனர்.
