அஜித்தை அடுத்து ஐந்து வருடத்திற்கு குத்தகை எடுத்த தயாரிப்பாளர்? கோடிகளை அள்ளி அள்ளி கொடுக்கிறாராமே!

ajith-kumar-1
ajith-kumar-1

முன்னணி நடிகர் தல அஜித்தை குறிப்பிட்ட தயாரிப்பாளர் ஒரு சில வருடங்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தரப் போவதாக பேச்சுக்களின் போது கோலிவுட் வட்டாரங்களில் பரவ ஆரம்பித்துவிட்டது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போடுகிறார் தல அஜித். ஒரு கட்டத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்த அஜீத் தற்போது தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இப்படத்திற்கு பிறகு தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் எப்படியாவது சீக்கிரம் முடித்துவிட்டு வலிமை படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தல அஜீத்துக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அள்ளி அள்ளி கொடுத்து கொண்டிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் தல அஜித் படம் ஹிட்டானாலும், இல்லை என்றாலும் படத்திற்கு படம் கோடிகளை ஏற்றி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான் தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருகிறார். வலிமை படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அஜித்தின் படங்களை தொடர்ந்து போனிகபூர் தயாரிக்க ஆசைப்படுகிறாராம்.

ajith-boneykapoor-cinemapettai
ajith-boneykapoor-cinemapettai

மேலும் வலிமை படத்தை தொடர்ந்து வினோத்தே தல அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க வாய்ப்பு இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அஜித்துடன் இன்னும் சில வருடங்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளாராம் போனிகபூர். அந்த வகையில் இன்னும் இவர்களது கூட்டணியில் குறைந்தது 2, 3 படமாவது வந்துவிடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Advertisement Amazon Prime Banner