அஜித் என்றாலே அவருடன் நடித்த அனைத்து ஹீரோயின்களும் புகழ்ந்து தான் பேசுவார்கள். அந்த வகையில் இவர் தன்னுடன் நடித்த ஷாலினியையே காதலித்து திருமணம் செய்தவர்.

ஆனால், இவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு போதும் காதலை காட்டியதே இல்லையாம், ஒரு நாள் ஷாலினியை காதலிப்பதாக அவர் தெரிவிக்க, ஷாலினி வீட்டில் பேசுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் அமர்க்களம் படப்பிடிப்பில் ஷாலினியை கையை அறுப்பது போல் ஒரு காட்சி எடுத்தார்களாம், அப்போது தெரியாமல் உண்மையாகவே ஷாலினி கையில் கத்தி பட, இரத்தம் வர தொடங்கியதாம்.

இதைப்பார்த்து அதிர்ந்த அஜித் பதறிவிட்டாராம், ஷாலினி அதை பெரிதும் காட்டிக்கொள்ளாமல் நடிக்க, அஜித்திற்கு ஷாலினி மேல் மேலும் மரியாதை வர, இவர் தான் தன் மனைவி என்று முடிவே செய்துவிட்டார்.

இந்த படம் முடிந்து ஒரு சில வருடங்களிலேயே இந்த ஜோடி ரியல் லைஃபிலும் இணைந்தது. அஜித்-ஷாலினியின் திருமண நாளான இன்று சினிஉலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.