சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்.. சிவகுமார் பாணியில் கோபப்பட்டு செல்போனை பிடுங்கிய அஜித்

தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்குரிய வாக்குச்சாவடியில் காலை முதலே ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித், சூர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பல நட்சத்திரங்களும் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் காலையிலேயே ஓட்டு போட வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தல அஜித் எப்போதுமே அதிகாலையில் வந்து நேரமாக தன்னுடைய முதல் ஓட்டை பதிவு செய்து விட்டு கிளம்பி விடுவார். அந்த வகையில் இன்றும் வாக்குச் சாவடிகளில் ஓட்டு பதிவுகள் தொடங்குவதற்கு முன்னரே வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார்.

எப்போதுமே அஜித் வருகிறார் என்றால் அந்த இடத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதும். ஆனால் சட்டமன்ற தேர்தல் என தெரிந்தும் ரசிகர்கள் கூட்டம் அஜித்தை வளைத்துள்ள வீடியோதான் இணையத்தில் உலா வருகின்றன.

இது ஒருபுறமிருக்க ரசிகர்கள் அஜித்தை முன்பின் செல்லவிடாமல் அணை கட்டியபடி செல்ஃபி புகைப்படங்களை எடுத்ததை பார்த்த அஜித் காண்டாகி விட்டார் போல. உடனடியாக செல்பி எடுத்த ரசிகர் ஒருவரின் செல்போனை பிடுங்கி விட்டார். இதுதான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.

ajith-election2021
ajith-election2021

அஜித் எப்போதாவது தான் வீட்டை விட்டு வெளியே வருகிறார். அப்போதும் இந்த மாதிரி செயல்களில் ரசிகர்கள் ஈடுபட்டு அதன் பிறகு அஜித் கோபப்பட்டு பின்னர் அதுவே அவருக்கு கெட்ட பெயராக மாறிவிடுகிறது. ரசிகர்களும் பொது இடங்களில் நடிகர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ. போதாக்குறைக்கு கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரம் இது.

ajith-election2021-01
ajith-election2021-01

Trending News