அஜித்தின் துணிவு படத்திற்குப் பிறகு அவருடைய அடுத்த வெற்றியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பல மாதங்களாக இழுவையில் இழுத்து அடித்துக் கொண்டிருந்த நிலையில் அடுத்த படத்திற்கான அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக வெளியிட்டார்கள். ஆனால் அது வெறும் அப்டேட் ஆக மட்டும் தான் இருந்தது. படப்பிடிப்பு பற்றி மௌனம் காத்து வந்தார்கள்.
அதன்பிறகு அவருடைய பிறந்தநாள் அன்று விடாமுயற்சி என்று டைட்டிலை வெளியிட்டு ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் வரை படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறார்கள் என்று பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது இதற்கு மிகப்பெரிய பிரச்சனை இருப்பதால் இதுவரை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறார்கள்.
Also read: அஜித், விஜய் விட நாங்க ஒன்னும் கொறஞ்சவங்க இல்ல.. மேடையில் குமுறிய ஸ்ருதிஹாசன்
அதாவது இப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா சமீபத்தில் தான் வருமான வரி பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். அதனால் அவரால் யாருக்கும் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கிறது. அதனால் தான் இப்படத்திற்கு தேர்வான த்ரிஷாவுக்கு அட்வான்ஸ் பணம் கூட கொடுக்க முடியாமல் படத்தை ஆரம்பிக்க முடியவில்லை.
இதே போல தான் மற்ற நடிகர்களுக்கும் நிலைமை. இதுக்கு என்ன முடிவு என்றே தெரியவில்லை. ஆனால் இப்படத்திற்காக அஜித்துக்கு மட்டும் ஏற்கனவே பணம் கொடுத்திருப்பதால் அவர் தயாராக இருக்கிறார். இந்த ஒரு விஷயத்தினால் அஜித், தயாரிப்பாளருக்கு சாதகமாக தற்போது ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு என்றே சொல்லலாம். அதுவும் அஜித் மனசு வைத்ததால் மட்டுமே. அது என்னவென்றால் தயாரிப்பாளர் இடம் ஹீரோயின் வரும்போது வரட்டும் அதற்கு முன்னதாக நான் நடிக்க வேண்டிய காட்சிகளை வைத்து படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று கூறுகிறார்.
ஏற்கனவே தயாரிப்பாளர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் இந்த விஷயம் செய்தால் கொஞ்சம் அவருக்கு தீர்வு கிடைத்தது மாதிரி இருக்கும். அத்துடன் தயாரிப்பாளரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி வளைந்து கொடுத்து எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பித்து விட்டார். இதனால் ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also read: அஜித்தின் அழகில் மயங்கி காதலித்த 5 நடிகைகள்.. திருமணத்திற்கு பிறகும் கூட விடாமல் துரத்திய ஹீரோயின்