fbpx
Connect with us

தல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.

ajith57-thala57

News | செய்திகள்

தல அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டுகள் இவை தான். வெளியான தகவல்.

தல அஜித்

பொங்கல் ஸ்பெஷலாக வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் பம்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படம் பி மற்றும் சி சென்டரில் வெற்றி பெரும் என்று பட ரிலீஸ் சமயத்தில் சொல்லப்பட்டது. இந்நிலையில் படம் ஏ சென்டரில் ஹிட் அடித்துள்ளது.

மேலும் குறிப்பாக பெற்றோர் குழந்தைகளின் உறவை வலுப்படுத்த செதுக்கப்பட்ட படம் என்றால் அது மிகையாகாது. தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்ற மெஸேஜ் சொல்லும் படம்.

viswasam-release

viswasam-release

அடுத்த படங்கள்

இந்நிலையில் தல அஜித் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகியது நாம் அறிந்த விஷயமே. அதில் முதல் படம் பிங்க் ரிமேக். வினோத் இயக்கத்தில் நஸ்ரியா, ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இரண்டாவது படத்தின் இயக்குனர் போன்ற தகவல்கள் வெளியாக்கவில்லை.

இந்நிலையில் அஜித் மீண்டும் சத்தியஜோதியுடன் இணைகிறார், சன் பிக்சர்ஸ் பாணரில் விஷ்ணுவர்தன் படம் போன்ற தகவல்கள் பரவியது. இதற்க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவரின் மானேஜர் சுரேஷ் சந்திரா, அஜித் 2020 இன் பாதி வரை போனி கபூரின் இரண்டு படங்களில் தான் கமிட் ஆகியுள்ளார். வேறு எந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் ஆகவில்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top