Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் கடவுள் கெட்டப்பில் அஜித்.. வைரலாகும் வேற லெவல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக திகழ்பவர் தல அஜித். இவருடைய படங்கள் தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டி தருபவையாக உள்ளன. தல அஜித்தும் ஒரு காலத்தில் ஹிட் கொடுக்க தடுமாறியவர் தான். அனைத்து நடிகர்களுக்கும் சோதனை காலம் என்று ஒன்று இருந்தது அனைவரும் அறிந்ததுதான்.
சில நடிகர்கள் நிராகரித்த கதைகள் மற்று நடிகர்கள் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற கதை தமிழ் சினிமாவில் ஏகப்பட்டது உள்ளது. அந்த வகையில் தல அஜித்தும் பல கதைகளை நிராகரித்துள்ளார். அதில் சில ஹிட் படங்களும் அடங்கும்.
நடிகர் சூர்யாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் நந்தா. ஆனால் முதலில் நடிக்க இருந்தவர் அஜித். அதேபோல் நடிகர் ஆர்யாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது நான் கடவுள். இந்த படத்திற்கும் முதன்முதலில் நடிக்க இருந்தவர் தல அஜித் தான்.
ஆனால் இந்த இரண்டு படங்களுமே டைரக்டர் பாலா எழுதிய கதைகள். தல அஜீத்துக்கும் பாலாவுக்கும் நீண்ட நாட்களாக மனக்கசப்பு இருந்து வருவது உண்மைதான். நான் கடவுள் படத்திற்காக உடல் இளைத்து நீளமாக முடி வளர்த்து கேரக்டராக தன்னை மாற்றிக்கொண்ட தல அஜித்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி படத்திலிருந்து நீக்கிவிட்டார் பாலா.
இதனால் அப்செட்டில் இருந்த அஜித்திற்கு மேலும் சங்கடத்தை வர வைக்கும் விதமாக அட்வான்சாக கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். இதனால் பல பிரச்சனைகள் இவர்களுக்குள் உருவாகி தல அஜித் அட்வான்ஸ் உடன் வட்டி பணத்தையும் சேர்த்து கொடுத்துள்ளார். சினிமாவில் யாரையும் முழுமையாக நம்ப கூடாது என்பதற்கு பெரிய நடிகர்களுக்கு நடந்ததே சாட்சியாகும்.
ஆனால் தல அஜித் நான் கடவுள் கெட்டப்பில் செம்ம மாஸாக உள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அந்த புகைப்படம் :

naan-kadavul-ajith
