fbpx
Connect with us

லாக் டவுனுக்கு பிறகு திரையரங்கில் ரி ரிலீஸ் ஆகும் அஜித்தின் படம்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்

ajith-in-hindi-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாக் டவுனுக்கு பிறகு திரையரங்கில் ரி ரிலீஸ் ஆகும் அஜித்தின் படம்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் தல அஜித்தின் ஹிட் படங்களை தியேட்டர்களில் மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளார்களாம் திரையரங்கு ஓனர்கள்.

அதாவது கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், சில நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. என்னதான் தியேட்டர்கள் திறந்தாலும் மக்கள் கூட்டம் பெரிய அளவில் இன்று வரை வரவில்லை.

இதனால் திரையரங்குகளில் மீண்டும் ‘தல’ படங்களை இறக்க முடிவு செய்துள்ளனராம் தியேட்டர் ஓனர்கள். ஏனெனில் தல அஜித், அந்த அளவிற்கு ரசிகர்களின் செல்வாக்கை தமிழகமெங்கும் பெற்றிருக்கிறார்.

இதனால் சென்னையில் பிரபலமான தியேட்டரான, கங்கா தியேட்டரில் அஜித்தின்  நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த படமான ‘விஸ்வாசம்’ மீண்டும் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்தத் தகவல்களைக் கேட்ட அஜித்தின் ரசிகர்கள், ‘தல’ய  மீண்டும் தியேட்டர்களில் பார்க்க போவதை எண்ணி, குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top