வாங்கிய அடியால் அஜித்துக்கு வந்த காதல்.. ஷாலினி நடிக்க தடை போட்ட தன் ரகசியம் இதுதான்

Ajith and Shalini: ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய எத்தனையோ பிரபலங்களை நாம் பார்த்திருப்போம். அதில் சில பிரபலங்கள் மட்டும் தான் கரம் பிடித்த காதல் வாழ்க்கையுடன் கடைசி வரை வாழ்ந்து வருகிறார்கள். இந்த லிஸ்டில் மனம் ஒத்தும் தம்பதிகளாக 24 வருடங்களுக்கும் மேலாக அதே காதலுடன் அஜித் மற்றும் ஷாலினி நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

தன்னுடன் நடித்த நடிகையை காதலித்து கரம் பிடித்த அஜித் மீது ஆரம்ப கட்டத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் கிசுகிசுகள் வந்தது. அதாவது அஜித் ஏற்கனவே ஒரு நடிகை மீது தீராத காதல் கொண்டு அவரை கல்யாணம் பண்ணுவதற்கு பல முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் சில பல காரணங்களால் அவர்களுடைய காதல் பாதிலேயே முறிந்து போய்விட்டது.

ஆண் அழகனாக சொக்க வைத்த காதல் மன்னன் அஜித்

பின்பு சினிமாவில் ரசிகர்களை சொக்க வைக்கும் அளவிற்கு ஆணழகனாக தொடர்ந்து நடித்து வந்தார். அதிலும் காதல் மன்னன் என்ற பட்டத்துடன் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களையும் தாண்டி இவருடன் நடித்த நடிகைகளையும் கவர்ந்து இழுத்தார். இதில் இன்னும் ஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் அஜித்தை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து ரசித்த நடிகைகளில் ஒருவர் தபு.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கும் பொழுது அஜித் இருந்த அழகை பார்த்து ரசித்துக்கொண்டே சூட்டிங்கில் இருப்பதாக அப்பவே கிசுகிசுக்கப்பட்டது. இதை ஒரு பேட்டியில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து நடித்து வந்த அஜித்துக்கு ஷாலினியை பார்த்ததும் திடீரென்று காதல் ஏற்பட்டுவிட்டது.

அதாவது அமர்க்களம் படத்தை எடுத்த சரண், அஜித்துக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அப்பொழுது இந்த படத்தில் நடிப்பதற்கு ஷாலினியிடம் பேச்சு வார்த்தை நடத்திருக்கிறார். ஹீரோ யார் என்று சொல்லாமலே சரண் கேட்டிருக்கிறார். ஆனால் ஷாலினி அந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லாததாக கூறிவிட்டார். இதை தெரிந்து கொண்ட அஜித், ஷாலினி வீட்டு நம்பரை வாங்கி நேரடியாக ஷாலினிக்கு ஃபோன் பண்ணி இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடியுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதன்பின் தான் ஷாலினிக்கு அமர்க்களம் படத்தில் அஜித் ஹீரோ என்பதே தெரிய வந்திருக்கிறது. உடனே நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் அஜித் என்றால் ஷாலினிக்கு ரொம்பவே பிடிக்கும் தீவிர ரசிகையாக பல படங்களில் ரசித்து பார்த்திருக்கிறார். இப்படி ஆரம்பித்த படப்பிடிப்பில் அஜித், ஷாலினியின் கண்ணழகில் சொக்கிப் போய் இருக்கிறார்.

அவ்வப்போது இருவரும் கண்ணாலேயே பேசி சிரித்திருக்கிறார்கள். இதை பார்த்த மொத்த யூனிட்டுமே புரிந்து கொண்டது இவர்களுக்குள் காதல் இருக்கிறது என்று. அத்துடன் அஜித், இயக்குனர் சரனிடம் இந்த படத்தில் நடிப்பதற்கு தொடர்ந்து பத்து நாள் கால் சீட் கொடுக்கிறேன். நீ என்ன பண்ணுவே ஏதோ தெரியாது, அந்த பத்து நாளுக்குள் படப்பிடிப்பை முடித்து விடு என்று கூறி இருக்கிறார்.

அதற்கு சரன் ஏன் என்று கேட்கும் பொழுது, சீக்கிரம் படத்தை முடிக்கவில்லை என்றால் நான் ஷாலினியை இன்னும் அளவுக்கு அதிகமாக காதலிக்க ஆரம்பித்து விடுவேன். அதனால் பிரச்சனை எதுவும் வராமல் தவிர்ப்பதற்காக தான் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதை ஷாலினி கேட்டு வெட்கத்துடனே புன்முறுவல் செய்து அஜித்துக்கு சம்மதத்தை தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே அஜித் காதல் தோல்வியால் நிறைய அடி வாங்கி இருக்கிறார். அதனால் எப்படியாவது இந்த காதலில் ஜெயித்து காட்ட வேண்டும் என்று ஷாலினி அப்பாவிடம் பொண்ணு கேட்டு இருக்கிறார். அதற்கு ஷாலினி அப்பா, என் மகள் இப்பதான் சினிமாவிற்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி சம்பாதிக்கும் இந்த நேரத்தில் கல்யாணம் பண்ணினால் செட்டாகாது என்று சொல்கிறார்.

உடனே அஜித், உங்க மகள் வாழ்நாளில் ஹீரோயினாக நடித்து எவ்வளவு சம்பாதித்து கொடுப்பாரோ அதை நான் கொடுக்கிறேன் என்று குட்டிக்கரணம் அடித்து காதலித்த ஷாலினியை கரம் பிடித்து விட்டார். அதன்பின் ஷாலினியை நடிப்பதற்கு முழு மனதுடன் அஜித் சம்மதம் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் அலைபாயுதே படம் வந்ததால் ஷாலினி நடித்தார்.

ஆனால் அந்த படத்தில் ஓவர் நெருக்கம் ரொமான்டிக் என்று அதிகமாக காட்டியதால் பொறாமைப்பட்ட அஜித், இது ஷாலினிக்கு செட்டாகாது என்றும், இனி நடிக்க வேண்டாம் என்று நடிப்பதற்கும் தடை போட்டு விட்டார். ஷாலினியும் அஜித் சொல்வது எதுவாக இருந்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அப்பொழுது எடுத்த முடிவால் இப்பொழுது வரை எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

Next Story

- Advertisement -