Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துடன் வீடியோ காலில் பேசிய பாலிவுட் பிரபலம்.. இந்திய அளவில் டிரெண்டான தலயின் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித்.
தற்போது வலிமை பட ஷூட்டிங்கில் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித்.
சமீபத்தில் அஜித்துடன் முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் வீடியோ காலில் பேசி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், அஜித்தின் ரசிகர்களால் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.
அதாவது தல அஜித்தை போன்றே வாகனங்களின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்தான் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஜான் ஆபிரகாம். இதனாலேயே ஆபிரகாம் வீட்டில் விலை உயர்ந்த ஆடம்பர ரக வாகனங்கள் பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்றது.
இந்த நிலையில் ஜான் ஆபிரகாம் தல அஜித்துடன் வீடியோ காலில் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் பலர், இந்தப் புகைப்படத்தை பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

ajith-john
