சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அஜித்- ன் குட் பேட் அக்லி எப்படி வந்திருக்கு? அனிமல் பட பிரபலம் பகிர்ந்த தகவல்

அஜித்குமார் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவ. தமிழ் சினிமாவில் கோசிப் பேசாத ஒருவராகவும் அஜித் அறியப்படுகிறார். சினிமாவைத் தாண்டி, கார் ரேஸிலும், உலக பைக் சுற்றுப் பயணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி.

இப்படம் வேகமாக தயாராகி வரும் நிலையில், இதில், பிரசன்னா, அர்ஜூஸ் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி டிரெண்ட்டான நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட்டை ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், அஜித்தின் நடிப்பில் பக்கா ஆக்சன் ஜர்னரில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை பிரமாண்டமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கில் ஐதராபாத்தில் நடந்த நிலையில், இந்த ஆக்சன் காட்சிகளுக்கான படக்குழுவினர் அடுத்து ஸ்பெயின் செல்லவிருப்பதாகவும், அங்கேயே முக்கிய பாடலும் ஷூட் பண்ணவிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பல்கேரியாவில் ஷூட்டிங் நடத்தவுள்ளது படக்குழு. இங்கு வரும் 24 ஆம் தேதி வரை ஷூட்டிங் நடக்கும் எனவும் அதன்பின் மீதமுள்ள காட்சிகள் இந்தியாவிலேயே ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு முதலில் திட்டமிட்டிருந்த நிலையில், மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது.

அஜித் பற்றி அனிமல் பட பிரபலம் கூறியதாவது:

இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றி அனிமல் படத்தின் சண்டைப்பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், ”பில்லா திரும்ப வந்துவிட்டார். குட் பேட் அக்லியில் புதிய அஜித்தைப் பார்க்கலாம். இப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவும் வரை ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டலும் குறையாது. இப்படத்தின் அஜித்தின் ரோல் பற்றிக் கூற முடியாது. ஆனால் படம் வேற லெவலில் உருவாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தின் குட் பேட் அக்லி பட அப்டேட் கேட்டவர்களுக்கு இப்படம் சூப்பராக வந்திருப்பதாகவும் பில்லா அஜித் திரும்ப வந்துவிட்டார் என பிரபல சண்டைப் பயிற்சியாளரே கூறியிருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அடுத்த அப்டேட் வரும் போது இணையதளத்தை தெறிக்கவிட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

Trending News