Connect with us
Cinemapettai

Cinemapettai

Ajithkumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த அஜித்தின் நண்பர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் ஆறுதல்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே அடுத்தடுத்து வரும் மரண செய்திகள் ஒட்டுமொத்த திரையுலகையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான கே. விஸ்வநாத், பின்னணி பாடகி வாணி ஜெயராம், இயக்குனர் கஜேந்திரன், நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பலரின் இழப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரும், பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவருமான நிக் ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்கரவர்த்தி இன்று மரணம் அடைந்துள்ளார். ஆரம்ப காலங்களில் அஜித் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்த போது அவரை தூக்கிவிட்டு அழகு பார்த்தவர் தான் இந்த தயாரிப்பாளர்.

Also read: வனிதாவின் எக்ஸ் கணவர் உயிரிழப்பு.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

அந்த வகையில் இவர் அஜித்தை வைத்து ராசி, முகவரி, சிட்டிசன், வாலி, வில்லன், வரலாறு என பல திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே இவர்கள் இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பும் இருந்தது. ஆனால் இடையில் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதனால் இவர்கள் கடந்த சில வருடங்களாகவே பேச்சுவார்த்தை இல்லாமல் பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி கடந்த எட்டு மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் சிகிச்சையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்.

Also read: பவர்ஃபுல் கதாநாயகிகளுக்காக தாறுமாறாக ஓடிய 5 படங்கள்.. செம்பியில் மிரட்டிய கோவை சரளா

ஆனால் நோயின் வீரியம் அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த சில நாட்களாகவே அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்த வகையில் இன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். இன்று மாலை அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

தற்போது அவருடைய இறப்புச் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய உடலுக்கு வைரமுத்து உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் ஆறுதல்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இறுதி அஞ்சலி செலுத்தும் வைரமுத்து

nic-arts-chakkaravarthy

nic-arts-chakkaravarthy

Also read: விஜய்யிடம் பேசி தந்திரமாக காய் நகர்த்தும் சங்கத்து ஹீரோ.. ஆசைப்பட்டதை நிறைவேற்றாமல் விடமாட்டாரு போல

Continue Reading
To Top