Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் படத்தின் ஒரு வர வசூலை தட்டி தூக்கிய அஜித்தின் சூப்பர் ஹிட் படம்.. மிரளும் கோலிவுட்!
தமிழ் சினிமாவின் உச்ச கதாநாயகர்களாக வலம் வருபவர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருடைய ரசிகர்களுக்கும் அவ்வப்போது கடும் போட்டி நிலவுவதால் வழக்கம்.
ஏனென்றால் பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு என தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருநாள் அன்று தல, தளபதி படங்கள் ரிலீசாகும்.
அப்போது யாருடைய படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் நேரங்களை அதிகமாக செலவிடுகின்றனர்.
எனவே தற்போது வெளியான தகவலின்படி கடந்த ஆண்டு பொங்கலன்று வெளியான விஸ்வாசம் படத்தின் வசூலானது, தீபாவளியன்று வெளியான பிகில் படத்தின் வசூலை விட விஸ்வாசம் அதிக வசூலை பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடி வசூலை பெற்றிருந்தாலும், முதல் வாரத்தில் ரூ. 100 கோடி வரை மட்டுமே வசூல் ஆகி இருந்தது.
ஆனால் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் முதல் 8 நாட்களில் ரூ. 125 கோடி வரை வசூல் செய்திருந்தது.

vijay-ajith-cinemapettai
ஆகையால், இதை வைத்து பார்க்கும்போது தளபதியின் படத்தைவிட தலையின் படம்தான் அதிக வசூலைக் குவித்து மாபெரும் சாதனைப் படைத்துள்ளது.
எனவே இந்த செய்தியை அறிந்த தல அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிடுகின்றனர்.
