Connect with us
Cinemapettai

Cinemapettai

சத்யஜோதி பிலிம்ஸுக்கு எதிராக போர்க்கொடி… அஜித்தின் விவேகம் படம் வெளியாகுமா…?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சத்யஜோதி பிலிம்ஸுக்கு எதிராக போர்க்கொடி… அஜித்தின் விவேகம் படம் வெளியாகுமா…?

பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த படம் தொடரி. ஆரம்பத்தில் இதோ அதோ என வெளியாவதில் இழுத்துக் கொண்ட பிரச்சனைகளுக்கு பிறகு படம் ஒரு வழியாக கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளியானது.

 

தமிழகத்தில் சுமார் 350 அரங்குகளுக்கு மேல் வெளியான இந்தப் படத்துக்கு முதல் நாள் காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. தமிழகம், பிறமாநிலம், மற்றும் வெளிநாடுகளிலும் இந்தப் படம் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே தோல்விப் படம் என்ற பெயரைப் தொடரி படம் பெற்றது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது.

 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோ தல அஜீத் என்பதால் நஷ்டத்தை அந்தப் படத்தில் சரிக்கட்டி விடலாம்  என சிலர் அமைதியாக இருந்தனர். நடிகர் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் கடந்த 12ம் தேதி வெளியாகி இது வரையில் 1 கோடிக்கு மேல் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவர உள்ள விவேகம் ஏரியா உரிமையை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

 

ஆனால் நஷ்டத்தில் உள்ளவர்களுக்கு விவேகம் படம் வழங்க மறுப்பதாகவும், சில விநியோகஸ்தர்கள் தங்களுக்கு சத்யஜோதி தியாகராஜன் தொடரி படத்தில் வழங்க வேண்டிய தொகையை வழங்கிவிட்டு அஜித் விவேகம் படத்தை ரிலீஸ் செய்யட்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

 

ஆனால் தற்போது கர்நாடகாவில் மட்டும் விவேகம் படத்தை சுமார் ரூ 5.80 கோடி வரை விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளார்களாம். இதற்கு முன்பு கபாலி மற்றும் ஐ படமே இத்தனை கோடிகள் விலைப்போனது.பிரச்சனை செய்யும் விநியோகஸ்தர்களை அழைத்து சமரசம் செய்யும் வேலையில் சத்யஜோதி பிலிம்ஸ் ஈடுபட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. விநியோகஸ்தர்கள் பிரச்சனை செய்தால் அஜித்தின் விவேகம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top