fbpx
Connect with us

அஜித் பட தயாரிப்பாளர் மீது பல கோடி மோசடி.. மலேசிய நிறுவனம் எழும்பூர் நீதிமன்றத்தில் புகார்

ajith-kumar-vivegam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பட தயாரிப்பாளர் மீது பல கோடி மோசடி.. மலேசிய நிறுவனம் எழும்பூர் நீதிமன்றத்தில் புகார்

விவேகம் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் டி.ஜி. தியாகராஜன் தயாரித்திருந்தார். இன்டர்நேஷனல் ஸ்பை திரில்லர் என்ற கதைக்கரு அடிப்படையில் இப்படம் உருவாகியிருந்தது.

இதன் அடிப்படையில், பட வினியோகஸ்தர்களிடம் பல கோடி ரூபாய்க்கு படத்தின் உரிமையை விற்றார். தல அஜித்தின் கேரியரிலேயே பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் தான், “விவேகம்”. “குருவி தலையில பனங்காய வைக்கலாம், ஆனால் பாம் வைக்க கூடாது” என்ற அடைமொழிக்கு ஏற்ப இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இயக்கி இருந்தார் என்று சொல்வதை விட நன்றாக உலகம் சுற்றி இருந்தார் என்று சொல்லலாம். படம் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகு, டி.ஜி. தியாகராஜன் விவேகம் படத்தை விற்றதன் அடிப்படையில் பலகோடி மோசம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

அதிக தொகைக்கு விவேகம் படத்தை ஒரு மலேசிய நிறுவனத்திற்கு விற்றுள்ளார். இதனால் அந்நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்கள் நஷ்டத்தை திரும்பக் கேட்டபோது தரமுடியாது என மறுத்துள்ளார்.

ஆகையால், மலேசிய நிறுவனம் தற்போது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.ஜி. தியாகராஜன் மீது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்கள். இதனால் தல ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது தனுஷ் நடிப்பில் பட்டாஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறது.  இதுமட்டுமல்லாமல் அடுத்த வருடம் தனுஷை மீண்டும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top