Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துடன் அதிரடியாக இணைந்த இயக்குனர் சேரன்..!
பொங்கல் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்..! சேரனின் திருமணம் டிரைலர்!
விஸ்வாசம் அஜித் ரசிகர்களின் இப்போதைய சுவாசம் என்றே கூறலாம். தூக்குதுரை இந்த கேரக்டரில் வேறு எந்த ஒரு நடிகரும் நினைத்து பார்க்க கூட முடியாத அளவிற்கு பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கி அஜித் நடித்த மூன்று படங்களை விட இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப்படம் முக்கியமாக குடும்பப்பாங்கான படம் என்பதால் ஃபேமிலி சென்டிமென்ட், காமெடி, சண்டை காட்சிகள் என்று அனைத்தையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அனைத்து ரசிகர்களும் தல அழும்போது தங்களை மீறி கண்ணீர் விட்டதை திரையரங்குகளில் காணலாம்.
மொத்தத்தில் விஸ்வாசம் அனைத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. இந்த படத்தின் இடைவேளையின் போது சேரன் இயக்கி வெளிவர இருக்கும் ‘திருமணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இது விஸ்வாசம் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் ‘திருமணம்’ டிரைலர் போடப்படும் என்பதை இயக்குனர் சேரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஸ்வாசம் திரையிடும் திரையரங்குகளில் எல்லாம் திருமணம் திரைப்படத்தின் முன்னோட்டம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.. ஒப்புதல் தந்த சத்யஜோதி நிறுவனத்துக்கும் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கியூப் நிறுவனத்துக்கும் நன்றி.. விஸ்வாசம் வெற்றியடைய வாழ்த்துக்கள். pic.twitter.com/E4TNMYCjKn
— Cheran Pandian (@cherandreams) January 9, 2019
இதன்மூலம் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் விஸ்வாசம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார். இதே தினத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் விஸ்வாசம் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.பேட்டை படத்தின் மரண மாஸ் பாடலை தனுஷ் மற்றும் த்ரிஷா திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடியதை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
#Petta is all yours in few hours.Thanks for so much love to the film.
Pls don't reveal the story & surprises, don't spread theatre clips & Say No to Piracy ?
Best wishes for success to Team #Viswasam too ?@sunpictures #PettaParaak !!
Let's Celebrate Thalaivar – the KING!! pic.twitter.com/Kciv7ZmXkT
— karthik subbaraj (@karthiksubbaraj) January 9, 2019
