அஜித்தை பாராட்டிய ஜெர்மன் நிறுவனம்…

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல், புகைப்படம் எடுப்பது, கார் பந்தயங்களில் ஈடுபடுவது, ஆளில்லா விமானங்களை தயாரித்து பறக்க விடுவது என பல விஷயங்களில் ஆர்வமுள்ளவர். எம்.ஐ.டி கேம்பஸில் பையிலும் ஏரோநாட்டிக்கல் மாணவர்கள், விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர்.

அதிகம் படித்தவை:  ரெமோவில் காத்திருக்கும் தல ரசிகர்களுக்கான ஸ்பெஷல் விருந்து..

அதற்கு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அஜித்தின் வழிகாட்டுதலில் ஆளில்லா விமானத்தை இயக்கும் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில், வேரியோ ஹெலிகாப்டர் எனும் ஜெர்மன் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அஜித்தை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  இது அஜித்துடைய கதையல்ல - முருகதாஸ்

அதில், “காலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மாலையில் எங்கள் அலுவலகம் வந்து சில நாட்கள் அஜித் ஆலோசனையில் ஈடுபடுவர். ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம். அவர் கொடுத்த சில ஐடியாக்கள் எங்களுக்கு பிடித்திருந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.