Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதெல்லாம் நான் செய்ததாக தெரியக்கூடாது.. தல அஜித் கோரிக்கை
தல அஜித் என்று சொன்னாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், திரையில் கண்டால் அதை விட பிரம்மாண்டம் தான், நேரில் பார்த்தால் கோடான கோடி மக்களுக்கு கனவு என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு தமிழ்சினிமாவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜீத் பல திறமைகள் கொண்டவர். புதுடெல்லியில் நடக்கும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அளவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இது மட்டுமல்லாமல் தன்னுடன் இருப்பவர்கள் ஏதேனும் கஷ்டம் என்று வந்தால் தன்னால் முடிந்த உதவியை செய்து அவர்களை சந்தோஷப்படுவார். தற்போது நடிகர் ஜெய்சங்கரின் மகன் ஒரு பிரபல கண் மருத்துவமனை நடத்தி வருகிறார். தல அஜித் மற்றும் டாக்டர் விஜய் சங்கர் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு வரும் நோயாளிகள் பணம் கட்ட முடியவில்லை என்றால் தான் கட்டுவதாகவும் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார். இது போன்று கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவும் தல அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த பாக்கிய சாலிகள் என்றே கூறலாம்.
இந்த உதவி வெளியே தெரியக்கூடாது என்று கோரிக்கையும் வைத்துள்ளாராம். இதுதான் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று கூறுவார்கள். இவரைப் பார்த்து வளர்ந்து வரும் ரசிகர்கள் இதே போன்று உதவிகளை சமூகத்திற்கு செய்து வந்தாலே மக்களுக்கு மகிழ்ச்சி தான்.
