முதல் முறையாக ரசிகர்களை சந்திக்க போகும் அஜீத்.. அதுவும் எப்படி எந்த இடம் தெரியுமா.?

போனி கபூர் தயாரிப்பில் அஜித் மிரட்டலாக நடித்துள்ள வலிமை படம் வரும் 24ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளிவர உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தப் படத்திற்கான விளம்பரத்தை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது படக்குழு.

தினம் தோறும் ஒரு வீடியோ ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு போனிகபூர் இணையத்தில் வலிமை படத்தை டிரெண்டாகி வருகிறார். பல மாதங்கள் கழித்து அஜித்தின் இந்த படம் வெளிவருவதால் ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. வலிமை படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பெங்களூரில் நடக்க உள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வலிமை பட கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் தல அஜித் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த ஒரு விழா மேடையிலும், தொலைக்காட்சியிலும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாத அஜீத் தற்போது வலிமை விளம்பரத்திற்காக தனது கொள்கையை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி பெங்களூரில் மாலை 7 மணி அளவில் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ விரைவில் அஜித்தை பெரிய திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிக சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் ஹாலிவுட் அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்காக அஜித் நிறைய ரிஸ்க் எடுத்து இருப்பதால் இந்த படத்தை மலைபோல் நம்பி உள்ளார் போனி கபூர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்