
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பார்கள். ஹெச் வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் படம் வலிமை.
வலிமை படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
திரையரங்குகளில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடாத அஜித் ரசிகர்களும் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இந்நிலையில் வலிமை படக்குழு முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்ய திட்டமிட்டுள்ளது.
திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது காலை 4 மணி முதலே சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்படும். ஆனால் வலிமை படம் நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் முதல்நாளே படத்திற்கு அதிக ஷோக்கள் கிடைக்கும்.
வலிமை படத்திற்கு நள்ளிரவு 1 மணியிலிருந்து அனுமதி கிடைத்தால் 8 காட்சிகள் வரை திரையிட முடியும். இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து முதல் நாள் வசூல் சாதனை செய்த முந்தைய படங்களின் சாதனையை வலிமை படம் முறியடிக்கும். இதனால் படக்குழு சிறப்புக் காட்சிக்கு அனுமதி பெற தீவிரம் காட்டி வருகிறது.