வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

வலிமை படத்தின் மீது பாய்ந்தது புதிய வழக்கு.. என்ன போனி படத்துக்கு புரோமோசனா.?

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வலிமை திரைப்படம் ஒரு வழியாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் விமர்சனங்கள் முன்ன பின்ன இருந்தாலும், விடுமுறை நாட்களில் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகத்தான் இருக்கிறது. நடிகர் அஜித்தின் நடிப்பிற்காக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் வரத்தான் செய்கின்றனர்.இதனால் படக்குழு கொஞ்சம் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை எடுக்க வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு படத்தை H. வினோத் எடுத்திருந்தாலும், ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போனது. படத்தின் நீளம் தான் படத்தை கெடுத்து விட்டது என்று படத்தின் நீளத்தை குறைத்து படம் வெளியிட்டிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படத்தின் விமர்சனங்கள் மாறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பல இடங்களில் குறிப்பாக பல வெளி நாடுகளில் இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வலிமை படத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில் வலிமை படத்தின் மீது ஒரு புதிய வழக்கு பாய்ந்து இருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் வழக்கறிஞர்களை தேவையில்லாமல் தவறாக சித்தரிப்பதாகவும், அந்த காட்சியினால் வழக்கறிஞர்கள் மதிப்பு குறைவு என்பது போல காட்டி உள்ளதாகவும் ஒரு புதிய வழக்கு வலிமை படத்தின் மீது பதியப்பட்டு இருக்கின்றது. வலிமை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது இந்த வழக்கு பதியப்பட்டு வைக்கின்றது. சென்னை காவல் ஆணையரிடம் இது குறித்த புகார் மனு அளிக்கப் பட்டிருக்கிறது.உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானவுடன் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதில் உள்ள சில காட்சிகள் தங்களுக்கு எதிராக உள்ளது என்று மாற்றப்பட வேண்டும் என்று சில தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அது எப்போதும் அஜித் படத்திற்கு நடந்தது இல்லை. ஏனென்றால் அது போன்ற காட்சிகளை படப்பிடிப்பின் போதே தவிர்த்துவிடுவார் அஜித்குமார். அப்படி இருக்கும்போது இந்த படத்தில் மட்டும் ஏன் இந்த வழக்கு வந்தது அப்படி என்ன வழக்கறிஞர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மறுபுறம் இந்த படத்தின் புரோமோஷனுக்காக எந்த செலவும் போனிகபூர் செய்யவில்லை. நேரடியாக படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அதிரடி காட்டினார். ஆனால் படம் தற்போது சரியாக போகவில்லை என்பதற்காக இது ஒருவேளை படத்தின் புரோமோஷனுக்காக வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்த செய்தியை சமூக வலைதளப் பக்கங்களில் சினிமா ரசிகர்கள் பதிவிட்டு என்ன வலிமை பட புரோமோசனா..? ஒன்றும் வேலைக்காகவில்லை என்று படக்குழு இப்படி இறங்கி விட்டீர்களா..? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Trending News