வாலி படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம்.. அப்பவே தல வேற ரகம்

ajith kumar
ajith kumar

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணி இல்லாமல் தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் கேரியரில் மிக முக்கியமான படம் வாலி. இப்படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரு வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 1999 இல் வெளியான படம் வாலி. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படத்தில் ஜோதிகா, விவேக், பாண்டு மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வாலி படம் ராமாயண புராணக்கதையின் கற்பனையான கதையாகும். இப்படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் தேவா, சிவன் கதாபாத்திரங்களில் இரட்டை சகோதரர்களாக நடித்திருந்தார். தேவா காது கேளாத, ஊமையாக இருப்பார். சிவன் தனது காதலியான பிரியாவை மணக்கும்போது, தேவா பிரியாவை வெறித்தனமாக விரும்புவார்.

அண்ணன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் சிவா இறுதியில் மனைவியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே வாலி படத்தின் கதை. இப்படத்தில் இரட்டை வேடங்களிலும் அஜித் தனது நடிப்பின் மூலம் வித்தியாசத்தை காட்டியிருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இப்படத்தில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் பல விருதுகள் அஜித்துக்கு வழங்கப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனங்களுடன் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

வாலி படத்தின் ஷூட்டிங் முடிந்து அனைத்து பணிகளும் முடிந்தபிறகு முழு படத்தையும் பார்த்துவிட்டு அஜித் உடனே எஸ் ஜே சூர்யாவுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளார்.
வாலி படம் வெளியாகி 22 வருடங்களுக்குப் பிறகு இப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக அஜித் 20 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

Advertisement Amazon Prime Banner