பிங்க்  படத்தின் ரீமேக்கில் தல அஜித் அவர்கள் அமிதாப் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க உள்ளார். இது அப்படத்தின் கெஸ்ட் ரோல் என்றும் இதனை இயக்குனர் வினோத் அவர்கள் படமாக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதனுடைய சுவாரசியம் என்னவென்றால் படம் மே 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நாள் தல அஜித்தின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 20 நாட்கள் கால்சீட் கொடுத்து இருப்பதாக கூறுகின்றனர்.

அஜித் ரசிகர்களுக்கு 2019ல் டபுள் ட்ரீட் கொடுக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று விஸ்வாசம் மற்றொன்று குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டு வெளிவரப்போகும் பிங்க் பட ரீமேக்கில் கெஸ்ட் ரோல்.

அதிகம் படித்தவை:  இது அஜித்துடைய கதையல்ல - முருகதாஸ்

அஜித் பின்னாடி எப்படி இவ்ளோ பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு முக்கியமான ஒரு காரணம் என்னவென்றால் தனக்கு உதவியாக இருக்கக்கூடிய சக தொழிலாளர்களை தனக்கு இணையாக மதிப்பார் என்பதுதான். இதற்கு உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த நடன பயிற்சியாளர் உயிரிழந்தது அவரை மும்பையில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்து அவர் வீட்டில் இறுதி சடங்கு வரை கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்களுக்கு மற்றுமொரு பெருமை படக்கூடிய விஷயத்தை ரசிகர்களுக்காக ஞாபகப்படுத்துகிறோம் என்னவென்றால் FEFSI மற்றும் ஊழியர்களுக்கான பிரச்சினைகள் வெடித்தபோது ஏவிஎம் ஸ்டூடியோ தான் கொடுத்த அட்வான்சை திருப்பி கேட்க அஜித் அவர்கள் அதை அன்றே தருவதாக கூறினார். ஆனால் அவருக்கு தமிழ் திரையுலகினர் யாருமே சப்போர்ட் செய்யவில்லை. அஜித்திடம் எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் முதலில் உங்கள் பிரச்சனையை முடித்து விட்டு வரவும் என்று அந்த பைனான்சியர் கூறியுள்ளார்.

thambi-ajith-VISWASAM
thambi-ajith-VISWASAM

எதற்கு இவ்விடத்தில் கூறுகிறோம் என்றால் அந்த ஃபைனான்சியர் இறந்த செய்தி தெரிந்தவுடன் அஜித் உடனடியாக கிளம்பி சென்று இறுதி சடங்கு நடந்து முடிக்கும்வரை கூடவே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பின்னாடி இவ்ளோரசிகர் பட்டாளம் இருப்பதற்கு முக்கியக் காரணமே தமிழில் வரும் பல பழமொழிகளுக்கு அவர் முன்னுதாரணமாக இருப்பது மட்டும்தான்.

அதிகம் படித்தவை:  கன்னடத்தில் விவேகம் படத்தை சாதனை நன்றி கூறிய விநியோகஸ்தர்.!

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.’