Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு
தமிழ் ரசிகர்களால் அன்போடு தல என்று கூறப்படுபவர் அஜித்குமார். அஜித்குமார் அவர்களின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வீரம், வேதாளம், விவேகம், ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. இவர்களது கூட்டணி தொடர்ந்து வெற்றியை கொடுத்தது. இப்படி இருக்கும் நிலையில் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் விஸ்வாசம் வெளிவர இருக்கையில், அஜித் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ajith as rajendra-chozhan
ஏற்கனவே ( தீரன் அதிகாரம் ஒன்று ) படத்தை இயக்கிய இயக்குனர் வினோத்துடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. இப்படி இருக்கும் நிலையில் பில்லா, ஆரம்பம், போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் மீண்டும் அஜித்குமார் அவர்களை வைத்து இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Ajith and Vishnuvarthan
இந்த படம் அடுத்தாண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணுவர்தன் நெருங்கிய நண்பரும் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இப்படத்தை இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணுவர்தன் மற்றும் அஜித் அவர்கள் இருவரும் இணைந்து படங்கள் அனைத்தும் வெற்றி கண்டன அதனால் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்குமார் அவர்களின் 60வது படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. பாலகுமாரன் எழுதிய ராஜேந்திர சோழன் கதையை மையமாக வைத்து இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க போகிறார்.
