fbpx
Connect with us

எகிறும் அஜித்57 பட பட்ஜெட்… தொடரியால் தயாரிப்பாளர் பயம்!

ajith57-thala57

News / செய்திகள்

எகிறும் அஜித்57 பட பட்ஜெட்… தொடரியால் தயாரிப்பாளர் பயம்!

நீண்டகால தயாரிப்பு பாரம்பர்யம் கொண்ட சத்யஜோதி நிறுவனம் இடையில் தயாரிப்பையே நிறுத்தி வைத்திருந்தது. தனுஷ் நடித்த தொடரி படம் மூலம் மீண்டும் சினிமா தயாரிக்க வந்தது.

அந்த படத்தில் ரயிலிலேயே நடக்கும் கதை என்பதால் இயக்குனர் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமானது. ஆனால் படம் ரசிகர்களை ஏமாற்றியதால் ஏகப்பட்ட நஷ்டமாம். இதே நிறுவனம்தான் அடுத்து தல நடிகர் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கும் பட்ஜெட் ரொம்ப்ப்ப்ப பெரிசு.

இரண்டு ஹீரோயின்கள், வெளிநாட்டில் படப்பிடிப்பு என்று பட்ஜெட் எகிறுகிறது. இதற்கு மேலும் ஹிந்தி நடிகரை வில்லனாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவை எல்லாவற்றையும் கணக்குப் போட்டு பார்த்தால் போட்ட பட்ஜெட் விட ரொம்ப அதிகமாக போய் விட்டதாம். தொடரி நஷ்டத்தையும் சேர்த்து பார்த்தால் அகலக்கால் வைத்து விட்டோமோ என்று அச்சப்படுகிறதாம் தயாரிப்பு தரப்பு.

அஜித் மேல் ஒரு நம்பிக்கை இருந்தாலும் முன்னெச்சரிகையா அடுத்த படத்தின் கால்ஷீட்டையும் சேர்த்து கேட்கலாம் என்று யோசிக்கிறார்களாம். ஆனால் தலதான் ரத்ன தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்திருக்கிறாராமே!

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top