அஜித்துடன் நான்காவது முறையாக இணையும் பிரபலம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய வலிமை

அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் வலிமை. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வலிமை படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வரை முடிந்தபாடில்லை.

இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். முன்னதாக ஆகஸ்ட் 2021 ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மீண்டும் வலிமை படம் தள்ளிச் செல்ல வாய்ப்புள்ளது எனவும், அனேகமாக 2021 தீபாவளி வெளியீடாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் அஜித்துடன் ஏற்கனவே வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்களில் காமெடி கூட்டணி போட்டு யோகிபாபு வலிமை படத்திலும் அவருடன் நடித்துள்ளார். மேலும் இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது.

இந்த தகவல் அரசல் புரசலாக வந்தாலும் சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு யோகி பாபு பதிலளித்து இதை உறுதி செய்துள்ளார். கண்டிப்பாக வலிமைப் படுத்தலும் நல்ல காமெடி காட்சிகள் இருக்கும் என நம்பிக்கை கொடுத்துள்ளார் யோகி பாபு.

ajith-yogibabu-combo-joins-4th-time
ajith-yogibabu-combo-joins-4th-time-in-Valimai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்