fbpx
Connect with us

Cinemapettai

சும்மா போனவனை கூப்பிட்டு அஜித் கேரக்டரில் நடிக்க வைத்த கவுதம்.. இப்ப அவர் எங்க இருக்கார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சும்மா போனவனை கூப்பிட்டு அஜித் கேரக்டரில் நடிக்க வைத்த கவுதம்.. இப்ப அவர் எங்க இருக்கார் தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் முதல் முறையாக தல அஜித் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஏ எம் ரத்னம் தயாரித்த இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது.

அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு செம பெயர் கிடைத்தது. அதன்பிறகு அருண்விஜய் தென்னிந்திய சினிமாவின் முக்கிய வில்லனாக மாறி விட்டார். ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் அதே படத்தில் சிறுவயது தல அஜித் ஆக நடித்து புகழ் பெற்றவர் தான் ஜாக் ரோபின்சன். சிறுவயது அஜீத்தாக நடிக்க பல குழந்தைகளை ஆடிசன் செய்த கௌதம் மேனன் ஜாக் ராபின்ஸ்சனை பார்த்தவுடனேயே அஜித் ஆக செலக்ட் செய்து விட்டாராம்.

விளையாட்டு போல ஆடிசனுக்கு சென்றவருக்கு வாழ்க்கை கிடைத்தது போல அஜித் பட வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனி ஒருவன் படத்தில் சிறுவயது அரவிந்த்சாமி நடித்த பட்டையைக் கிளப்பினார்.

சமீபத்தில் கூட திமிரு பிடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனி தம்பியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு சினிமாவில் செம கிராக்கியாம்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரிய சர்ச்சையை கிளப்பிய ஹீரோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் படம் சொதப்பினாலும் அவருக்கு படங்கள் குவிந்து கொண்டே போகிறதாம். பையனும் நடிப்பில் வெளுத்து வாங்குறாராம். வாழ்த்துக்கள் தம்பி..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top