தல அஜித் பல விஷயங்களில் ஆர்வம் கொண்டவர் பைக் ரேஸ்,கார் ரேஸ், சமையல், புகைப்படம் எடுப்பதிலும் இவர் தொடாதா துறைகள் என்றால் குறைவு தான் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

ajith

நடிகர் தல அஜித் ஆலோசனையில் MIT மாணவர்கள் குழு ஓன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை படைத்துள்ளது  இந்த ஆளில்லா விமானம் சுமார் ஆறு மணி நேரம் வானில் பறந்து சாதனை படைத்துள்ளது.

ஆம் சென்னை MIT மாணவர்கள் இணைந்து ஆளில்லா விமானம் ஒன்றை தயாரிக்க டீம் தக்‌ஷா என்னும் பெயரில் புதிய மாணவர்கள் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு அஜித் முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

ajith
ajith

அஜித்தின் ஆலோசனையில் உருவான ஆளில்லா விமானம் 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டது இந்த போட்டியில் அஜித் தலைமையிலான மாணவர்கள் குழு தக்ஷா வடிவமைத்த ஆளில்லா விமானம் சுமார் 6 மணி நேரம் 7 நிமிடம் பறந்து உலகிலேயே அதிக நேரம் பரந்த ஆளில்லா விமானம் என்ற சாதனையை படத்துள்ளது.