அஜித் சொன்னதுதான் நடந்தது! இதெல்லாம் முன்னாடியே தெரியும் – இயக்குனர் சிவா

ஒரு படம் முடித்து அத ரிலீஸ் பண்ணி அதுவும் வெற்றி பெற வைக்கறதுலாம் மிகபெரிய வேலை, வலி. விவேகம் படம் வெளியான அன்று அந்த படத்திற்க்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. ஒருவர் படத்தை தரக்குறைவாக பேசியது பற்றி சினிமா துறையில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இயக்குனர் சிவா அளித்துள்ள பேட்டியில் , “தரக்குறைவாக பேசியவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.” என்று கூறினார்.

கிளைமாக்ஸ் சீனில் வந்த பாடல் பற்றி கேட்டபோது, “எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது, சிலருக்கு பிடித்தது ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை” என கூறினார்.

“உண்மையான உழைப்பு தோத்ததாக சரித்திரம் இல்லைனு அஜித் சார் சொன்னாரு. அது இப்போ நிரூபணம் ஆகிட்டு வருது” என சிவா மேலும் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது போலவே விவேகம் படமும் பல சாதனை படைத்தது வருகிறது.

 

Comments

comments