Connect with us
Cinemapettai

Cinemapettai

பரத்தை நெகிழ வைத்த தல.. நீண்ட வருடங்கள் கழித்து அஜித்தை பற்றிய சுவாரசியமான செய்தி

ajith-bharath

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பரத்தை நெகிழ வைத்த தல.. நீண்ட வருடங்கள் கழித்து அஜித்தை பற்றிய சுவாரசியமான செய்தி

தமிழ் சினிமாவில் வாழ்ந்து கெட்ட நடிகர்கள் என்று சொல்லும் அளவுக்கு பல நடிகர்கள் ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து பின் தோல்விப் படங்களால் மக்கள் மனதிலிருந்து நீங்கியவர்கள் லிஸ்ட் பெரிதும் உள்ளது.

அதில் மிகவும் முக்கியமான இடத்தில் இருப்பது நடிகர் பரத் தான். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், செல்லமே படத்தில் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் அறியா பையனாக அறிமுகமாகி தொடர்ந்து காதல், எம்டன் மகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தான் பரத்.

பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் ஏராளமாய் கவர்ந்து வைத்திருந்த பரத், தனது தவறான படங்களினால் அதைக் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் முயற்சியை எப்போதுமே கைவிடாத மனிதர். எப்படியோ தட்டுத்தடுமாறி காளிதாஸ் என்ற படத்தின் வெற்றியின் மூலம் என் முயற்சி என்றும் தோற்காது என அறிக்கை மணி அடித்துள்ளார்.

நேபாளி, 555 போன்ற படங்களில் சினிமாவின் மீது அவர் கொண்ட நேசம் தெரிந்தது. அவ்வளவு உழைப்பு போட்டும் மக்களிடம் சரியாக அந்த படங்கள் கொண்டு சேர்க்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பரத், தல அஜித் சம்மந்தப்பட்ட சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றைக் கூறி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

555 படத்தில் பரத் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு நடித்திருப்பார். அந்த படத்தின் கதைக்காக முரட்டுத்தனமான உடம்பை ஏத்தி அனைத்து நடிகர்களின் பார்வையையும் தன் மீது விழவைத்தார். அதில் தல அஜித்தை பரத் மிகவும் கவர்ந்து விட்டார்.

பரத்தின் உழைப்பை பாராட்டும் வகையில் தல அஜித் அவருக்கு போன் பண்ணி வாழ்த்தியுள்ளார். எப்போதுமே உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர் தான் தல அஜித். இருந்தாலும் அவருக்கு எவ்வளவு சீக்கிரத்தில் உடல் எடை குறைகிறதோ அவ்வளவு வேகமாக உடல் எடையும் கூடி விடுகிறது.

இதனால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நல்ல ட்ரெயினர் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த தல அஜித்துக்கு 555 படத்தை பார்த்த பிறகு பரத் உடைய பயிற்சியாளரையே தனக்கும் பயிற்சி சொல்லி கொடுக்குமாறு கேட்டு கொண்டாராம் தல அஜித்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top