fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யை வச்சி செஞ்சாச்சி அடுத்து அஜித்துக்கு வலை.. பிடி குடுப்பாரா தல

ajith-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை வச்சி செஞ்சாச்சி அடுத்து அஜித்துக்கு வலை.. பிடி குடுப்பாரா தல

தளபதி விஜய் தற்போது தனது உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் முற்றிலும் முடிவடைய உள்ளது. படப்பிடிப்பு முடியும் முன்னரே தளபதி விஜய் தனது டப்பிங் பணியை துவங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் ஏப்ரல் 9-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தளபதி விஜய் தனது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாகவும் அதனை சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தல அஜித்தின் படத்தை தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அனேகமாக தல 61 படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கலாம் எனவும் தல அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களை தொடர்ந்து தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பார்வை தற்போது தல அஜித்தின் மீது விழுந்துள்ளதால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற தயாரிப்பு நிறுவனங்களை விட சன் பிக்சர்ஸில் நடிக்கும்போது சம்பளம் அதிகமாக தருவார்கள் என்பது அனைத்து நடிகர்களுக்கும் தெரிந்த விஷயம்.

இதனால் சன் பிக்சர்ஸ்க்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top